RSS

ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமி திருநக்ஷத்ரம்

30 Aug

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாஸனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாஸனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து, திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 8வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி வரம்தரும் பெருமாள் அப்பை ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் ஆகும்.

திருநக்ஷத்ரம் – ஆவணி மாதம் அவிட்டம் நக்ஷத்ரம்.

மற்றொரு திருநாமம் – வரதராஜ தேசிகர்

இவருக்கு மூன்று திருக்குமாரர்கள் அவதரித்தனர். அவர்களுடைய திருநாமங்களும் திருநக்ஷத்ரங்களும்.

1) திருவாழி ஆழ்வார் பிள்ளை – தை உத்திரட்டாதி

2) சுத்த சத்வம் அண்ணன் – மாசி சோதி

3) சித்தப்பை – புரட்டாசி பூராடம்

ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பையும் அவருடைய மூன்று திருகுமாரர்களுடன் விஷதவாக்சிகாமணிகளான ஸ்ரீ மணவாளமாமுனிகள் திருவடிகளிலே ஆச்ரயித்தார்.

ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமி ஆசார்ய கைங்கர்ய நிஷ்டையைக் கண்ட ஸ்ரீ மணவாளமாமுனிகளும் பஞ்ச ரத்ன ஆசார்ய பீடத்திலே ப்ரதானராய் அபிஷேகம் செய்வித்து ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணனை நித்ய திருவாராதனத்திற்கு எழுந்தருளப்பண்ணி கொடுத்து அனுக்ரஹித்து அருளினார்.

தனியன்

யோகிநோ வரவரஸ்ய ஸத்தயா-
வாரிதிம் குஸிகவம்ஸபூஷணம்
வந்திஷீய வரணீயவாங்மயம்
வத்ஸலம் வரதராஜதேஸிகம்

வாழி திருநாமம்

எத்திசையும் பாடியத்தை எடுத்துரைப்போன் வாழியே
எங்கள் இளையவில்லி யென்னேத்துமவன் வாழியே முத்திதருமாறன் மொழி முயன்றுரைப்போன் வாழியே முதுகாவணியவிட்டம் முன்புதித்தான் வாழியே
பக்தியுடன் வரயோகி பதம் பணிவோன் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துரைப்போன் வாழியே
அத்திகிரி வாழும் அண்ணல் அருளுடையோன் வாழியே
அன்புடனே வரந்தருவார் அடியிணைகள் வாழியே

வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a comment