RSS

திருநெடுந்தாண்டகம் ஐந்தாம் பாசுரம்:

13 Aug

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பாசுரம்:

ஒண்மதியிற் புனலுருவி ஒருகால் நிற்ப ஒரு காலும் காமருசீர் அவுனனுள்ளத்து
எண்மதியும் கடந்து அண்டம் மீது போகி இருவிசும்பினோடு போய் எழுந்து* மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிரவோடித் தாரகையின் புரந்தடவி அப்பால் மிக்கு*
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர்புரையும் திருவடியே வணங்கினேனே*

பாசுர அர்த்தம்:

நான்காம் பாசுரத்திலே திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தை ஸ்மரித்தார். இந்த பாசுரத்திலே நாராயணா என்ற திருநாமத்தின் அர்த்தமான வ்யாபகத்வத்தை த்ரிவிக்ரம அவதார விசேஷத்திலே இட்டு மங்களாசாசனம் பண்ணுகிறார்.

எம்பெருமானுடைய ஒரு திருவடியானது த்ரிவிக்ரம அவதாரத்தின் போது பூமி, சப்த சாகரங்கள், சப்த த்வீபங்கள் எல்லாவற்றையும் தாண்டி அண்ட கடாஹத்துக்கும் அப்பால் உள்ள ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச் சென்று நின்றதாம். எம்பெருமானின் மற்றொரு திருவடியானது மகா பாக்யசாலியான மகாபலியானவன் தன் நெஞ்சிலே நினைத்திருந்த நினைவைத் தாண்டி, ஆகாசம் சூர்யமண்டலம், சந்திரமண்டலம் மற்றும் நக்ஷத்ர மண்டலம் ஆகிய அனைத்தையும் கடந்து ப்ரம்ஹ லோகத்தளவும் வியாபித்து நின்றதாம். இப்படி ஈரேழு பதினான்கு லோகங்களையும் ச்வாதீனப் படுத்திக்கொண்ட தாமரையையொத்த எம்பெருமானுடைய திருவடிகளை வணங்கப் பெற்றேன் என்று ஆழ்வார் இந்த பாசுரத்திலே தெரிவிக்கிறார்.

அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: