RSS

திருநெடுந்தாண்டகம் – இரண்டாம் பாசுர அர்த்தம்:

29 Jan

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

இரண்டாம் பாசுரம்:

பாருருவில் நீர் எரிகால் விசும்புமாகி*
பல் வேறு சமயுமமாய்ப் பறந்து நின்ற*
ஏருருவில் மூவருமே என நின்ற*
இமையவர் தம் திருவுருவேறேண்ணும் பொது*
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ*
ஒன்று மாகடல் உருவம் ஒத்து நின்ற*
மூவுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி*
முகில் உருவம் எம் அடிகள் உருவந்தானே*

பாசுர அர்த்தம்:

இந்த பாசுரத்திலே அரி அயன் அரன் என்கிற திருமூர்த்திகளும் சமம் என்று சொல்லப்படுகிற அனர்த்தத்தை தமக்கு போக்கி அருளியபடியை ஆழ்வார் தெரிவிக்கிறார். அதாவது இருவர் சரீரபூதராய் ஒருவன் சரீரியாய் இருக்கும் தன்மையை தமக்கு எடுத்துக்க் காட்டி அருளியபடியை இந்தப் பாசுரத்திலே மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார். எத்தனையோ இந்த்ராதி தேவர்கள் இருந்தாலும் விஷ்ணு, நான்முகனான ப்ரஹ்மா மற்றும் சிவன் என்கிற மும்மூர்த்திகளே முக்கியமாக கொள்ளப்பட்டார்கள். நான்முகனின் வடிவம் பொன்னின் வடிவமாயும், பரமசிவனுடைய உருவம் சிவந்த நெருப்பைப் போன்றும், பரந்தாமனான ஸ்ரீமன் நாராயணின் திருவுருவம் கருங்கடலைப் போன்றும் உள்ளது. இதை நாம் சாத்திரம் கொண்டு ஆராயும்போது, பஞ்சபூதங்களை உண்டாக்கியும், ஜகத்தை ஸ்ருஷ்டித்தும், சிருஷ்டிக்கப்பட்ட சகத்திலே வ்யாபகனாய் நிற்கிற எம்பெருமானுடைய உருவம் காளமேக உருவாய் இருக்கும் என்று பிராமணங்கள் தெரிவிப்பதால் முகில் உருவம் உடையவனே எம்பெருமான் என்று தெரியவரும்.

பாருருவி நீரெரிகால் விசும்புமாகி பல்வேறு சமயமுமாய் என்றது சமஷ்டி சிருஷ்டியையும், வ்யஷ்டி சிருஷ்டியையும் குறிக்கும். அதாவது பலவகைப் பட்ட பாகுபாடுகளைக் கொண்ட ஜகத்தை உண்டாக்கியதை தெரிவிக்கிறது. உலகில் உள்ள பொருட்களுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு உண்டு. தேவதைகள் ஆராதிக்க உரியவராயும் அமுதம் உண்பவராயும், மனிதர்கள் ஆராதிப்பவர்களாயும் அன்னம் உண்பவர்களாயும், த்ரியக் தாவரங்கள் ஆராதனைக்குக் கருவியாயும் ஏற்பாடு ஆகும். சூக்ஷ்ம சேதன அசேதன விஷிஷ்டனாகிற படியை பறந்து நின்ற என்ற பதம் தெரிவிக்கும். அதாவது சிருஷ்டிக்கப் பட்ட சகல பதார்த்தங்களிலும் வியாபித்து இருக்கும் தன்மை(ஆத்மாவாய்).

சிருஷ்டி, ரக்ஷணம், சம்ஹாரம் என்பன மூன்று தொழில்கள். இந்த மூன்று எம்பெருமான் ஒருவனே நிர்வஹித்தாலும், பிரமனைக் கொண்டு சிருஷ்டியையும், உருத்திரனைக் கொண்டு சம்ஹாரத்தையும், தானே ரக்ஷணத்தையும் பண்ணுகிறான் என்பதை அறியாமையாலே சில சாமான்ய ஞானிகள் மூவரும் ஸ்வதந்திர நிர்வாகிகளாகக் கொள்வர்.

பொன் ஆனது அனைத்துவிதமான ஆபரணங்களையும் பண்ணுவதற்கு உரியதாய் இருப்பது போன்று, பதினான்கு லோகங்களையும் படைப்பதற்கு உரியதாய் அமைந்த உருவம் நான்முகனுடையது ஆகும். சம்ஹரிப்பதர்க்கு உரித்தாய் இருக்கும் உருத்திரனின் உருவம். எம்பெருமானுடைய ச்வபாவமோ தன்னிடம் ஆச்ரயித்தவர்களை தன அபிமானத்தாலே ரட்சிக்கும் தன்மையாய் இருக்கும்.

அதாவது சிருஷ்டிக்கு பொருத்தமாய் இருக்கும் பொன் உருவம், சம்ஹாரத்திக்கு பொருத்தமுடையதாய் இருக்கும் செந்தீ உருவம், ரக்ஷணம் பண்ணுவதற்கு பொருத்தமாய் இருக்கும் மாகடல் உருவம். மேலே சொல்லப்பட்ட மூவுருவையும் பிரமாணங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் “பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய் பரந்துநின்ற ஒன்றே ஆம் சோதி ஆகும்.

அடியேனின் சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எம்பெருமான் சங்கல்பத்தாலும் ஆசார்ய கடாக்ஷத்தாலும் இந்தப் பதிப்பை அடியேனால் பதிவு செய்ய முடிந்தது.

குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்

Advertisements
 
 

4 responses to “திருநெடுந்தாண்டகம் – இரண்டாம் பாசுர அர்த்தம்:

 1. சேரன்குளம் கிடாம்பி முகுந்தன்

  February 4, 2012 at 12:32 pm

  தேவரீரின் கைங்கர்யத்துக்கு பல்லாண்டு பல்லாண்டு!

  அடியேன் மதுரகவி தாசன்

   
  • Srivathsan Ramanuja Dasan - Tirukkovalur

   February 4, 2012 at 6:58 pm

   ஸ்ரீ:

   உயர்வற உயர்நலம் உடையவனான எம்பெருமான் சங்கல்பம் மற்றும் ஆசார்ய அநுக்ரகம் சுவாமி.

   நீசனேன் நிறை ஒன்றுமிலேன் சுவாமி.

   தாசானு தாசன்

   இராமானுஜ சிஷ்யன்

    
   • kidaambi

    February 5, 2012 at 4:37 pm

    திருப்பாவையிலும் ஆண்டாள் “ஆழி மழைக் கண்ணா” பாடல் மூலம் தெரிவிப்பது இதையே ஸ்வாமி. “ஊழி முதல்வன்” போல் மெய்கருக்க வேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறதும் உலகை ஸ்ரிஷ்டித்த பத்மநாபானயே. காருண்யமே உருவானதால் நாரணனுக்கு கார் வண்ணம்.

     
   • Srivathsan Ramanuja Dasan - Tirukkovalur

    February 5, 2012 at 7:46 pm

    அடியேன் இராமானுஜ தாசானு தாசன்

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: