RSS

திருப்பல்லாண்டு தனியன் விளக்கம்:

25 Jul

திருப்பல்லாண்டு தனியன்:

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது

குருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான்
நரபதி பரிக்லுப்தம் ஷுல்கமாதாதுகாம:
ச்வஷுரமமரவந்த்யம் ரங்கநாதச்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி

விளக்கம்:
ஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யாசம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனின் சபையிலே எம்பெருமானின் இயற்கையான இன்னருளினால் பகவத் பரத்வத்தை நிலைநாட்டுவதர்க்காக சகல வேதார்த்தங்களையும் எடுத்துரைத்தவரும், பொற்கிழியைப் பரிசாக வென்றவரும், தேவர்களாலும் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ்வாரை வணங்குகிறேன்.
பாண்டிய பட்டர் அருளிச்செய்தவை:

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்*
சொன்னார் கழற் கமலம் சூடினோம்* முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்* கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.

விளக்கம்:

மதிலாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஒரு முறை சொன்னவருடைய திருவடித்தாமரைகளை சிரமேற்கொண்டோம். புருஷாகாரம் வெளியாகாத காலத்திலே பர தத்வ நிர்ணயம் பண்ணி பொற்கிழியை அருத்தருளினார் என்று சொல்லப்பெற்றோம்; ஒ நெஞ்சே அதோகதியான நரகத்தில் சேருகைக்கு உண்டான வழியை அறுத்தோம்(அறப்பண்ணினோம்).

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று*
ஈண்டிய சங்கம் எடுத்தூத* வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்*
பாதங்கள் யாமுடைய பற்று*

விளக்கம்:
பாண்டிய மன்னனான வல்லபதேவன் பிராமணர்களுக்கு உபகாரகரான ஸ்ரீ பெரியாழ்வார் எழுந்தருளுகிறார் என்பதை எல்லோரும் அறியும் படியாக திரள் திரளான சங்குகளை பலர் மூலமாக ஊத, வித்யாப்யாசம் சிறுதும் இல்லாமலே வேத வேதாந்த பிராமணங்களை சபையிலே எடுத்துக்காட்டி பொற்கிழியை அறுத்தருளின ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருவடிகளே நமக்கு புகலிடம் என்பதை உணர்த்தும் தனியன் ஆகும்.

குறிப்பு: அடியேனுக்கு தெரிந்த புரிந்த அளவிலே ஆச்சார்ய அனுக்ருஹத்துடன் எம்பெருமான் சங்கல்பமாக அடியேன் எழுதுகிறேன். அடியேனது பதிவுகளில் குறை இருப்பின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

அடியேன் இராமானுஜ தாசானு தாசன்
வாழி யதிராஜன்!

Advertisements
 

2 responses to “திருப்பல்லாண்டு தனியன் விளக்கம்:

 1. Rajesh

  August 19, 2010 at 9:58 am

  அடியேன் அடியேன் நமஸ்காரம் ,

  தங்கள் கைங்கர்யம் சிறப்பானது . மேலும் தொடருங்கள் .
  நாலாயிர திவ்ய ப்ரபந்தம் விளக்கம் முழுவதும் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து உள்ளீர்கள்
  என்று நினைக்கிறேன் . வாழ்த்துக்கள் .

   
 2. Rajesh

  August 19, 2010 at 10:01 am

  அடியேன் ஒரு சிறு விண்ணப்பம் ,
  தாங்கள் இந்த கைங்கர்யத்தை google-in blogspot.com செய்தால் பலரும் வருவார்கள் என்பது என் எண்ணம் .
  ஏனென்றால் இதிலே நிறைய advantage உள்ளது .
  அடியார்கள் பலரும் follow செய்ய வசதியும் உள்ளது .

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: