RSS

திருப்பல்லாண்டு: 1

08 Jul

திராவிட வேதமான திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்த ஆழ்வார்கள் பன்னிருவருள் ஸ்ரீ விஷ்ணுசித்தரும் ஒருவர் ஆவார். விஷ்ணுசித்தர் என்பது ஸ்ரீ பெரியாழ்வாரின் இயற்ப்பெயர் ஆகும். எம்பெருமான் மீது இருந்த அன்பின் மிகுதியாலும் எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடினமையாலும் இவருக்கு ஸ்ரீ பெரியாழ்வார் என்ற சிறப்புத் திருநாமம் ஏற்பட்டது. “பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் என்பது பெரிய ஜீயர் அருளிச் செய்த ஸ்ரீ சுக்தி யாகும்.”

ஆழ்வார்களின் தலைவரான ஸ்ரீ நம்மாழ்வருக்குக் கூட வித்வான்களின் சபையிலே பரதத்வ நிர்ணயம் பண்ணும் நிர்பந்தம் ஏற்படவில்லை. வித்யாப்யாசம் சிறுதும் இல்லாமலே கைங்கர்யமே பரமபுருஷார்த்தம் என்ற வகையிலே திருவில்லிபுத்தூரிலே எம்பெருமான் வடபத்ரசாயியின் திருக்கோவிலுக்கு அருகிலே ஒரு நந்தவனம் அமைத்து எம்பெருமானுக்கு அனுதினமும் புஷ்ப கைங்கர்யம் பண்ணிவந்தார் நம்முடைய ஸ்ரீ பெரியாழ்வார். இப்படி பல காலம் கழிந்த பின்பு ஒரு சமயம் பாண்டிய அரசனான வல்லபதேவன் என்பான் மறுமையிலே நன்றாக இருக்க இம்மையிலே என்ன செய்ய வேணும் என்ற விஷய விசாரத்திலே ஆழமான சிந்தனை கொண்டு பரதத்வம் யாது என்பதை அறிய பல பண்டிதர்களைக் கொண்டு வாதம் வைத்து அறிய வேணும் என்று தீர்மானம் கொண்டு வாதத்திற்கு நாள் அறிவித்தான். எம்பெருமான் தானும் ஸ்ரீ பெரியாழ்வாரைக் கொண்டு இவ்வாதத்திலே தாமே பரதத்வம் என்பதை நிரூபிக்கவேனும் என்று திருவுள்ளம் பற்றி ஆழ்வாரின் கனவிலே தோன்றி இதனை அறிவிக்க, ஆழ்வாரும் அடுத்த நாள் காலை எழுந்து தம்முடைய நித்ய அனுஷ்டானம் மற்றும் கைங்கர்யங்களை முடித்துக்கொண்டு வாதத்திற்கு புறப்பட்டார்.

வாத பிரதிவாதங்கள் தொடங்கியது. எல்லோரும் தங்கள் தங்கள் மதங்களை ஸ்தாபிக்க பல பிரமாணங்களை சபையிலே சமர்பிக்க ஸ்ரீ பெரியாழ்வார் தானும் எம்பெருமானின் நிர்ஹேதுக கிருபையாலே வேத வேதாந்த பிரமாணங்கள், இதிஹாச புராண ஆகமப் பிரமாணங்கள் அனைத்தையும் சபையிலே எடுத்துக்காட்டி ஸ்ரியப்பதியான எம்பெருமானுக்கே பரத்வம் உண்டு என்றும் பர தத்துவம் என்ற சொல்லுக்கு உரியவன் ஜகத் ரக்ஷகனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்ட, வாதத்தில் வேல்வோருக்காக பரிசாக கட்டப் பட்டிருந்த பொற்கிழியானது தானே தாழ வந்ததாம்.
அரசனும் ஆழ்வாரைப் பெருமைபடுத்த அவரை யானை மீது ஏற்றி நகர்வலம் அழைத்து வர ஸ்ரீ வைகுண்டனாதனான எம்பெருமான் தானும் கருடாரூடனாக சேவை சாதித்தானாம். ஆழ்வாரும் எம்பெருமானை சேவித்து; அவனுக்கு ஜய விஜயீ பவ என்றபடி துன்பமயமான இந்த நிலத்திலே எம்பெருமானுக்கு ஒரு அமங்கலமும் வரக்கூடாது என்பதற்காக எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார் இந்தத் திருப்பல்லாண்டிலே.

தொடரும்…..

அடியேன் இராமானுஜ தாசானு தாசன்

குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: