RSS

கர்த்தா – கர்த்தாயில்லை

22 Jun

சாதுர்வர்ண்யம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரம் அபி மாம் வித்தி அகர்த்தாரம் அவ்யயம்

எவனொருவன் என்னை இந்த உலகின் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகவும், கர்த்தாயில்லை என்றும் அறிகிறானோ அவன் என்னைக் குறித்து கர்மங்களைச் செய்து ஆத்ம ஸ்ரேயஸ் பெறுகிறான் என்கிறான் கீதாசார்யனான கண்ணன் எம்பெருமான் பகவத் கீதையிலே.

எம்பெருமானே சர்வசேஷியாகவும், சர்வத்துக்கும் சுவாமியாகவும் இருப்பதனால் அவன் கர்த்தா என்ற பொருள் பொருந்தும், ஆனால் கண்ணன் எம்பெருமான் ஏன் தன்னை கர்த்தா இல்லை என்று சொல்லவேணும்………….

காரணம் உண்டு – அதற்கும் கண்ணன் எம்பெருமான் விடை அளிக்கிறான்.

சுவாமி எம்பெருமானார் இதை அடியேன் போன்ற ஞான சூன்யங்களுக்கும் புரியும் படியாக அருமையாகவும் எளிமையாகவும் விளக்குகிறார். பூமியிலே இரண்டு குழிகளைத் தோண்டி ஒரு குழியிலே அவரை விதையும் மற்றொரு குழியில் துவரை விதையும் விதைக்கிறோம். விதைத்த பின்பு அதற்க்கு தண்ணீரும் பாய்ச்சுகிறோம். அவையும் முளைக்கின்றன. இங்கே பூமியிலே விதைகளை நடும் வரை தான் நாம் கர்த்தா என்று நாம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் பூமியிலிருந்து, அதாவது அவரை விதையிலிருந்து அவரை செடியும் துவரை விதையிலிருந்து துவரை செடியும் வருவதற்கு நாம் கர்த்தா என்று சொல்ல முடியாது இல்லவும் இல்லை.

அது போன்று ஜீவனுக்கு பிரக்ருதி சம்பந்தம் ஏற்படுத்தும் வரை தான் எம்பெருமான் கர்த்தா ஆவான். ஆனால் தேவனாகவும் மனிதனாகவும் பசு பக்ஷிகளாகவும் பிறப்பதற்கு அவர் அவர்களுடைய பூர்வ ஜன்ம கர்ம பலன்களே ஆகும் என்பதை நாம் உணரவேணும்.

தெளிவாக சொல்லவேணும் எனில் ஜீவாத்மாவை ஒரு சரீரத்திற்குள் கொண்டு விடுவது எம்பெருமான் தான் ஆனால் அந்த ஜீவாத்மா எந்த சரீரம் கொண்டு பிறக்கும் என்பது நம் பூர்வ ஜன்ம வாசனையின் காரணமாகவே இருக்கும். இதற்கும் எம்பெருமானுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணருவோம்.

அடியேன் இராமானுஜ தாசானு தாசன்

 
 

One response to “கர்த்தா – கர்த்தாயில்லை

  1. venatesh

    July 26, 2010 at 10:59 am

    oppliappan suprabhatam

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: