RSS

ஸ்ரீ திருப்பாணாழ்வார்

22 Mar

ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

இந்த பகுதி தொடக்கமாக ஸ்ரீ திருப்பாணாழ்வார் அருளிச் செய்த திவ்யப் பிரபந்தமான அமலனாதிபிரான் மூலம் மற்றும் அவற்றின் எளிய அர்த்தம் ஆகியவற்றை ச்வீகரிப்போம். முதலிலே திவ்ய சரித்திரத்தை அனுபவித்துவிட்டு அருளிச் செயலுக்கு செல்லுவோம்.

சரித்திரம்:
கங்கையிற் புனிதமான காவிரி பாயப்பெரும் ஸ்ரீவைஷ்ணவ தலைநகரான திருவரங்கம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப் பெரும் திவ்யதேசத்திற்கு அருகிலுள்ள திருவுறையூர் என்னும் திவ்யதேசத்தில், துர்மதி வருடம், கார்த்திகை மாதம், ரோகினி நக்ஷத்திரத்தன்று திருமாலின் ஸ்ரிவத்சத்தின் அம்சமாய் ஒரு அந்தணனின் கழனியிலே நெற்பயிர்க்கடியில் திருவவதாரம் செய்தருளினார்.

அந்தத் தெய்வக் குழந்தையை பாணர் குளத்தில் பிறந்த ஒருவர் எடுத்து வந்து, தானும் மனையாளுமாக பரிசுத்தமான ஆகாரங்களை மட்டுமே கொடுத்து வளர்த்து வந்தார்கள். திருமாலின் இயற்கையான இன்னருளினால் ஆழ்வார் திருவவதரித்த படியால், உலகப்பற்று சிறிதும் இல்லாதவராய், ஞான பக்தி வைராஞங்கள் நிறைந்தவராய், நாரத பகவான் போலே சங்கீத சாமர்த்தியம் பெற்றவராய் வாழ்ந்து வந்தார். இப்படி வாழ்ந்து வரும் சமயத்தில் ஸ்ரீ விஸ்வக்சேனர் இரகசியமாக எழுந்தருளி பஞ்சசம்ச்காரம் சாதித்தார்.

மகா பாகவதரான ஆழ்வாரும் பண் இசைத்துக்கொண்டே திருவரங்கம் பெரியபெருமாளுக்கு மங்களாசாசனம் பண்ணுவதற்காக திருவரங்கம் வந்தடைந்தார். பாணர் குளத்தில் அவதரித்தவர் என்பதாலும், கோயிலுக்குள் சென்று எம்பெருமானை சேவிக்க முடியாத சூழ்நிலை காரணமாகவும், ஆழ்வார் காவிரி ஆற்றங்கரையில் யாழும் கையுமாக நின்று கொண்டே நம்பெருமாளுக்கு கீர்த்தனைகளை பாடிக்கொண்டு இருந்தார்.

இருக்க; ஒரு நாள் எம்பெருமானுக்கு நித்யம் தீர்த்த கைங்கர்யம் பண்ணும் அந்தணரான ஸ்ரீ லோக சாரங்கர் எம்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வருவதற்காக பொன்னித்துறையை அடைகையில், வழியிலே பாணரைக் காண்கிறார்; கண்டவுடன் பாணரே எட்டச்செல் என்று சொல்ல, பாணரும் எம்பெருமான் அனுபவத்தில் மூழ்கி மெய்மறந்து நகராது அங்கேயே நிற்க; அருகில் இருக்கும் மற்ற அந்தணர்களும் எட்டச் செல் என்று சொல்லியும் செவி சாய்க்காமல் அங்கயே நின்றார். அதுகண்டு இவன் கானயோகி போலும் என்று நினைத்து சிலர் நகர்ந்து செல்ல, மூர்க்க குணம் கொண்ட சிலர் எப்படியும் பானரை அங்கிருந்து துரத்தியே ஆகவேண்டும் என்ற கேட்ட எண்ணம் கொண்டு அவர் மீது கற்களை எறிந்தனர். குருதி வழிய வழியே அங்கேயே எம்பெருமானையே நினைத்துக் கொண்டு நின்றாராம் பாணர்.

இந்நிகழ்வுகளைக் கண்டு அர்ச்சகர் கோவிலதிகாரிகளுக்கு தெரிவிக்க, அவர்களும் அரசனிடம் முறையிட்டார்களாம். அரசன் மந்திரிகளோடு ஆலோசனை நடத்திய பின்னரும் காரணம் கண்டு பிடிக்க முடியாமல் அந்த பாரத்தை எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்க, கருணையே வடிவெடுத்தவளான பிராட்டி எம்பெருமானைப் பார்த்து நித்யம் நம்மை அநவரத பாவனை பண்ணிவருகிற நம் பாணனைப் புறம்பே நிற்கப் பார்க்கலாமோ என்று விண்ணப்பிக்க எம்பெருமானும் பாணரைத் தம்மிடம் அழைத்துக் கொள்ள திருவுள்ளம் கொண்டானாம்.

பிராட்டியின் இஷ்டத்தைப் பூர்த்தி பண்ணவும், பகவத் ப்ராப்திக்கு சாதி முக்கியமில்லை பக்தியே முக்கியம் என்பதை உலகோர்க்கு எடுத்துரைக்க, ஸ்ரீ லோகசாரங்கரின் கனவில் எம்பெருமான் தோன்றி பாண்பெருமாளை தேவரீர் தோளிலே எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வாரும் என்று நியமிக்க, லோகசாரங்கரும் மறுநாள் காலை இந்தச் செய்தியை எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டு வழக்கம்போல் காவிரிக்குச் சென்று, அங்கு நின்றிருந்த பாணரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து எம்பெருமான் திருவுள்ளத்தை தெரிவித்து நிற்க, பாணரும் நீச்சனான அடியேன் திருவரங்கப் பெருநகரை மிதிக்கலாமோ என்று வினவ, அடியேன் தோள் மீது எழுந்தருளவேனும் என்று மீண்டும் பிரார்த்தித்து நிற்க, பாணர் அதை பாகவத அபசாரமாகக் கருதி மறுத்து விட்டாராம். பின்னர் இது எம்பெருமான் ஆணை என்று லோகசாரங்கர் மூலமாக தெரிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தோள் மீது ஏறி அமர, ஸ்ரீ லோகசாரங்கர் அவரை அரங்கநாதன் திருமுன்பே இறக்கிவிட்டாராம். பாணரும் எம்பெருமானைத் திருமுடி முதல் திருவடி வரை சேவித்து, அவன் அழகில் ஈடுபட்டு அவ்வழகின் பெருமையை உலகோர்க்கு புரியும் வகையில் பாடின பிரபாந்தமே அமலனாதிபிரான் என்னும் திவ்யப்ரபந்தம் ஆகும். அதை நாமும் அனுபவிப்போம்.

குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்

அடியேன் இராமானுஜ தாசன்

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: