RSS

SRI KOIL KANDHAADAI ILAIYAVILLI DHOTTAYAACHAARYA SWAMI THIRUNAKSHATHRA MAHOTHSAVAM

09 Nov

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டயாச்சார்ய சுவாமி திருநக்ஷத்ர மஹோத்சவம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஸ்ரியப்பதியான சர்வேஸ்வரன் சம்சாரி சேதனர்கள் உஜ்ஜீவனத்துக்காக, ஆழ்வார்களை அவதரிக்கச் செய்தான். அவ்வாழ்வார்களும் சர்வேஸ்வரனின் நிர்ஹேதுக கிருபையால் மயர்வற மதிநலம் அருளப் பெற்று அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்தார்கள். நற்கலைகள் என்ற சொல்லானது திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைக் குறிக்கும். ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் பண்ணப்பெற்ற இந்தப் பிரபந்தங்களில் பொதிந்து கிடக்கும் சம்ப்ரதாய ரஹஸ்ய அர்த்தங்களை எல்லாம் நமக்கு எளிதில் புரிய வைக்க திருவுள்ளம் கொண்டு ஆசார்யர்களை அவதரிக்கச் செய்தான் கருணையே வடிவெடுத்தவனான எம்பெருமான்.

இந்த ஆச்சார்யர்களின் திருவவதாரங்களையே குருபரம்பரை என்று கொண்டாடுகிறோம். இதை நம் பூருவர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்றால் – சுவாமி நம்மாழ்வார் ஆன மேகமானது கருணை என்ற மழையை பொழிய, அம்மழையானது சுவாமி நாதமுனிகள் என்னும் மலையில் விழுந்து, அம்மலையில் இருந்து இரண்டாகப் பிரிந்து அருவிபோல் அடித்துச் சென்று (உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி), ஆளவந்தாரான பெரிய ஆறாக ஓடி அங்கிருந்து ஐந்து வாய்க்கால்களாகப் பிரிந்து(சுவாமி ஆளவந்தாரின் ஐந்து சிஷ்யர்களை குறிக்கும்), அங்கிருந்து ஒரு பெரிய ஏரியை வந்தடைந்து,(பெரிய ஏரி என்று சொல்லப்படுவது சுவாமி ராமானுஜரை), அங்கிருந்து எழுபத்து நான்கு மதகுகள் மூலம் அந்த நீரானது(ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்) வழிந்து ஓடியது என்று சொல்வார்கள். எழுபத்து நான்கு மதகுகள் என்ற சொல் சுவாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட எழுபத்து சிம்மாசனாதிபதிகளைக் குறிக்கும்.

குறிப்பு: இன்றும் சுவாமி நாதமுனிகளின் அவதாரத் தலமான காட்டுமன்னார்குடிக்கு அருகில் இருக்கும் வீரநாராயண ஏரியில் எழுபத்து நான்கு மதகுகள் இருப்பதை நாம் பார்க்கலாம்.
ஸ்வாமி இராமானுஜர் நியமித்தருளிய எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் குமாண்டூர் இளையவில்லியாச்சானும் ஒருவர் ஆவார். இந்த ஸ்வாமி சுவாமி ராமானுஜருடைய சித்தி குமாரர் ஆவார். சுவாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட இந்த மகாச்சார்யனின் பரம்பரையில் அவதரித்தவரான நம் பெரிய சுவாமி நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்த பரம வைதிக மதமான எம்பெருமானார் தர்சனத்தை முன்னோர் மொழிந்த முறை தப்பாமல், ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று சொல்வதற்கு ஏற்ப எல்லா சம்சாரி சேதனர்களையும் செயல் நன்றாகத் திருத்திப்பணிகொண்டும், அடைந்தோர்க்கு எல்லாம் அன்பனாகவும் இருந்து கொண்டும், எம்பெருமானின் திவ்ய குணங்களையே த்யானம் செய்து கொண்டும் நலம் தரும் சொல்லான நாராயண நாமத்தை உபதேசக்க்ரமமாக சிஷ்யாளுக்குச் சாதித்து வாழ்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

நம் சுவாமி பற்பல திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்துள்ளார். சுவாமி கூரத்தாழ்வானுக்கு மனதில் ஒரு சின்ன குறை இருந்ததாம். என்ன குறை என்றால் சுவாமி ராமனுஜருடன் தனக்கு ஆத்ம சம்பந்தம் இருந்தாலும் ஒரு ஆழாக்கு தேக சம்பந்தம் இல்லையே என்று கூறுவாராம். நம் சுவாமிக்கு அந்த குறையும் நிறைவே. அதனால் நம் திருமாளிகை சிஷ்யாளுக்கும் அந்த குறையும் இல்லை. இரண்டு சம்பந்தத்தையும் பகவான் கொடுத்துள்ளான்.
இப்பேற்பட்ட பெருமையை உடைய இந்த திவ்ய குருபரம்பரையான இளையவில்லி ஆச்சான் சுவாமியின் திருவம்சத்தில் திருவவதாரம் செய்தருளினவரும், வைகுந்தவாசியுமான உபயவேதாந்த வித்வான் ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டயாச்சார்யரின் திருவவதார நன்னாளானது (தனுர் மாதம் பூரட்டாதி நக்ஷத்ரம்) ஆங்கில மாதம் டிசம்பர் இருபத்து மூன்றாம் தேதி(23.12.2009) புதன்கிழமை அன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீ வானமாமலை ஜீயர் மடத்தில் நடைபெற ப்ராப்தமாய் உள்ளது. சிஷ்யா மற்றும் அபிமானிகள் திரளாக கலந்து கொண்டு இந்த திவ்ய வைபவத்தை அனுபவித்து சுவாமியின் கிருபையைப் பெற்றுக்கொள்ள பிரார்த்திக்கிறேன்.

அடியேன் இராமானுஜ தாசன்
திருமாளிகை சிஷ்யன்.

Advertisements
 
1 Comment

Posted by on November 9, 2009 in Sri Vaishnavam

 

One response to “SRI KOIL KANDHAADAI ILAIYAVILLI DHOTTAYAACHAARYA SWAMI THIRUNAKSHATHRA MAHOTHSAVAM

 1. P.SundaraRajan

  December 16, 2009 at 6:33 am

  Good job done. My best wishes and blessings.

  Very happy to note that you are maintaining a blog for the benefit of many devotees
  Best wishes to get the blessing of Sriyapapati and Acharyan.

  Jai Srimannarayana.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: