RSS

அவதார ரஹஸ்ய ஞானம் – தொடர்ச்சி

16 Aug

“த்யக்த்வா தேஹம் புநர் ஜென்ம நைதி” என்பது கண்ணின் திருவாக்கு. அதாவது இந்த அவதார ரஹஸ்ய ஞானம் பெற்றவன் சஞ்சித கர்மா மற்றும் பிராரப்த கர்மா இரண்டும் தொலைந்து மறுபிறப்பில்லாது மோக்ஷம் அடைகிறான் என்று கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறான்.

மேலும் கண்ணன் தெரிவிக்கிறான் – ஹே அர்ஜுனா மோக்ஷம் விரும்பி பகவத் பக்தி செய்பவனுக்கோ சஞ்சித கர்மா தொலைந்து, அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் ப்ராரப்த கர்மா தொலைந்த பின்பு தான் மோக்ஷம் சித்திக்கும், அதற்க்கு பல பிறவிகளை கடக்க வேண்டி இருக்கலாம். ஆனால் இந்த அவதார ரஹஸ்ய ஞானம் பெற்றவனுக்கோ சஞ்சித மற்றும் பிராரப்த கர்மா இரண்டும் தொலைந்து இப்பிறவி இறுதியிலேயே மோக்ஷத்தை அடைகிறான்.

சத்யவாக்யன் சாக்ஷாத் எம்பெருமான் சாதித்த திருவாக்கு.

இந்த ஞானத்தை பெறுவது ஒரு தபஸ் போல. நமக்கு பல பாபங்கள் உள்ளன. நாம் கர்மாநுஷ்டானம் செய்வதற்குத் தடையான பாபம், பகவத் ஞானம் பெற முடியாமல் தடுக்கும் பாபம், பகவத் பக்திக்குத் தடையான பாபம், மற்றும் பகவத் ப்ராப்திக்குத் தடையான பாபம் ஆகியவை ஆகும். இந்த நான்கு விதமான பாபங்களையும் இந்த ஞானமானது போக்குகிறது. இதனால் நமக்கு சப்தாதி விஷயங்களில் ருசி உண்டாகி வைராக்யம் ஏற்பட்டு, பக்தி செய்து மோக்ஷம் பெறுகிறோம்.

அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதிஉள்ளேன் , குறை இருந்தால் அடியேனை க்ஷமித்தருளி திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

அடியேன் இராமானுஜ தாசன்

 
 

4 responses to “அவதார ரஹஸ்ய ஞானம் – தொடர்ச்சி

  1. mv

    August 17, 2009 at 5:46 am

    பகவானை அடைய தடுக்கும் நான்கு பாபங்கள் பற்றி விவரிக்கவும். வைராக்யம் வளர்த்துக்க முயர்ச்சி செய்யலாம்
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

     
    • srivathsan

      August 17, 2009 at 4:29 pm

      பாபங்களைப் பற்றி இங்கு விவரிப்பது என்பது சற்று கடினம் – க்ஷமிக்கவும். அடியேன் தேவரீருடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கிறேன் – அப்போது இந்த இணையதளத்திலும் அடியேன் சேர்க்கிறேன்.

      கால அவகாசம் தருமாறு பிரார்த்திக்கிறேன்.

      தாசானு தாசன்
      இராமானுஜ சிஷ்யன்

       
  2. mv

    August 17, 2009 at 5:51 am

    தீ குறளை சென்று ஓதோம். அது ஒன்று.

     
  3. mv

    August 18, 2009 at 4:36 am

    நீங்கள் தான் அடியேனை க்ஷமிக்க வேண்டும்.
    பாபங்களை பற்றி படித்தவுடன் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் கார்யங்களை முடிந்த அளவு தவிக்கலாமே என்று ஒரு ஆசை அவ்வளவு தான்.

    உங்களால் முடிந்த பொழுது அனுப்பவும். மிக்க நன்றி.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: