RSS

திருவரசு புனருத்தாரணம்:

13 Aug

உத்தமனான சர்வேஸ்வரன் பின்னானார் வணங்கும் சோதியாக, தேங்கிய மடுக்கள் போன்று, தானுகந்து அர்ச்சாவதரமாக எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் நம் பாரத தேசத்தில் பல உள்ளன. உயர்வற உயர்நலம் உடையவனான எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்று வழங்கப் பெறுவர். அவ்வாழ்வார்களும் எம்பெருமானின் பரம கிருபையினால் தன்னுடைய ஈரச் சொற்களால் எம்பெருமானை மங்களாசாசனம் பண்ணி அருளினர். இப்படி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட திருத்தலங்கள் திவ்யதேசம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆழ்வார்களின் ஈரச் சொற்களே நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்கள் நூற்றெட்டு ஆகும். பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்றானதும், நடு நாட்டு திருப்பதிகளுள் ஒன்றானதுமான திருக்கோவலூர் திவ்யதேசத்தில் தான் முதன்முதலில் இந்த திராவிடவேதமான நாலாயிர திவ்யப்பிரபந்தம் மங்களாசாசனம் பண்ணப்பட்டது. பூங்கோவலூரும் முதல் திவ்யதேசம் ஆனது.

இந்த திருத்தலம் பரம்பரையாக ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தில் பட்டத்தில் எழுந்தருளி இருந்த ஜீயர் சுவாமிகள் நிர்வகித்து வந்ததோடு, இன்றும் வர்த்தமான ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி நியமனத்துடனே நிர்வாகங்கள், கைங்கர்யங்கள் மற்றும் உத்சவங்கள் எல்லாம் நடைபெற்று வருகிறது. பட்டத்தில் எழுந்தருளி இருந்த முதல் பத்து ஜீயர் சுவாமிகளின் திருவரசு தென் பெண்ணை ஆற்றில் இருக்கிறது. சுமார் ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தின் காரணமாக ஜீயர் சுவாமிகளின் திருவரசுகள் அடித்துச் செல்லப்பட்டு சிதைந்த நிலைக்கு உள்ளானது.

பொருளாதார நிலை காரணமாக இத்தனை வருட காலம் சீரமைக்கப் படாத நிலையிலேயே இருந்து வந்தது. வர்த்தமான ஜீயர் சுவாமி, ஜீயர் சுவாமிகளின் திருவரசுகளை சீரமைக்க திருவுள்ளம் கொண்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டு கைங்கர்யம் நடந்து வருகிறது. ஜீயர் மடத்து சிஷ்யர்கள், அபிமானிகள் அனைவரும் இந்த திருப்பணியில் கலந்து கொண்டு ஜீயர் சுவாமிகளின் திருவருளுக்கு பாத்திரமாகும் படி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நிதிஉதவி, பொருள் உதவி ஏதுவானாலும் கைங்கர்யம் பண்ணுவதற்கு விருப்பம் உள்ள பாகவதர்கள் இந்த கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு திருப்பணியில் கலந்து கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: ஸ்ரீ கோபால் இராமானுஜ தாசன்
தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்: +919842032191
பகவான் ஸ்ரீராமன் அணிலின் கைங்கர்யத்தை அங்கீகரித்ததைப் போல நாம் பண்ணும் கைங்கர்யம் சிறியதாக இருந்தாலும் பகவான் பெருமையுடன் ஏற்றுக்கொள்வான். இதை கண்ணனே கீதையில் அருளிஉள்ளான். சிறுதுளி பெருவெள்ளம் என்று கூறுவதைப் போன்று நாம் பண்ணும் சிறிய கைங்கர்யம் பலர் கூடி பண்ணும் போது பெருவெள்ளத்தைப் போன்று பெரிதாகி கைங்கர்யம் சிறப்பாக அமையும் என்பது திண்ணம். இதை வாசிப்போர் அனைவரும் கைங்கர்யத்தில்கலந்து கொண்டு, எல்லோருக்கும் தெரியப் படுத்த வேணும் என்று பிரார்த்திக்கிறேன்.

அடியேன் இராமானுஜ தாசன்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: