RSS

பாகவதர்களின் விரோதிகள்

24 May

இன்றைய தினம் ஸ்வாமி திருக்கோஷ்டியூர் நம்பியின் திருநக்ஷத்ர நன்னாள். ஸ்வாமி எம்பெருமானாரின் ஆசார்யார்களுள் ஒருவர். ரஹஸ்யார்த்தங்களை ஸ்வாமிக்கு சாதித்தவர். அவர் நமக்கு ஸ்வாமி எம்பெருமானார் மூலமாக ப்ரசாதித்து அளித்த விரோதிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இந்த விரோதிகளே நம்மை வீடுபேறு அடைவதிலிருந்து தடுக்கிறது.

ஸ்வாமி எம்பெருமானாருக்கு ஸ்வாமி திருகோஷ்டியூர் நம்பி உபதேசித்த ஆறு வார்த்தைகள்(ஆறு விரோதிகளைப் பற்றி ஸ்வாமி உபதேசமாகப் பெற்றதைத் தெரிந்து கொள்வோம்):

ஆஸ்ரயண விரோதி:

எம்பெருமானை அடைய விடாமல் தடுப்பன அஹங்காரம், மமகாரம், பேற்றில் ஐயம், பிராட்டி மற்றும் ஆசார்யானிடத்தில் அபசாரப் படுத்தல்.

ச்ரவண விரோதி:

தன்னை மறந்து செவிசாய்த்து பிற விஷயங்களைக் கேட்டல். அதாவது பிற தெய்வங்களைப் பற்றிக் கேட்பதில் உள்ள ஈடுபாடு ஸ்வாமியைப் பற்றிக் கேட்பதைத் தடுக்கும்.

அனுபவ விரோதி:

இதற்க்கு நுகர்ச்சி விரோதி என்று சொல்லப்படுகிறது, அதாவது மலர், சந்தனம், சிற்றின்பம் முதலியன பகவத் அனுபவத்தைக் கெடுக்கும்.

ஸ்வரூப விரோதி:

இயல்புக்கு விரோதி என்று பொருள், இறைவனுக்கு உரியன் நாம் என்பதை மறக்கச் செய்யும்.

பரத்வ விரோதி:

பிரம்மா, ருத்ரன் முதலானவர்களை ஈஸ்வரனாக எண்ணுதல்.

ப்ராப்தி விரோதி:

இது பேறு பற்றிய விரோதியாகும். கைவல்யம் போன்ற பலனை விரும்புதல் எம்பெருமானை அடைய விடாமல் தடுக்கும்.

அடியேன் சுருக்கமாக எழுதியுள்ளேன். அடியேனது உரையில் குறை இருந்தால் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்

 

4 responses to “பாகவதர்களின் விரோதிகள்

  1. mv

    August 9, 2009 at 3:47 am

    பேற்றில் ஐயம்

    அடியேன் dhaasasya விக்ஜாபனம். இதை பற்றி கொஞ்சம் விவரிக்கவும்.

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

     
  2. Srivathsan

    August 9, 2009 at 9:23 am

    ஆச்சார்ய திருவடி சம்பந்தம் பெற்று, எம்பெருமானை சரணடைந்த பின்பு பேறு தப்பாது என்று துணிந்திருக்கையே இங்கு சொல்லப்படுகிறது.

    ஸ்ரீ சுக்தி: பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே சாற்றுகின்றேன்

    அடியேன் இராமானுஜ தாசன்

     
  3. mv

    August 12, 2009 at 6:43 am

    அடியேன் தாசஸ்ய விஞ்ஜாபனம்.
    ஒருவர் ஆசாரியன் மூலம் பெருமாளை சரண் அடைந்த பிறகு அதாவது வீடு பேற்றில் பற்றி ஐயம் கொள்ளல் கூடாது.

    கைவல்யர்கள் ஆத்மானுபாவத்திலே திளைப்பார்கள் இல்லையா?

    சரிதானே?

     
    • srivathsan

      August 12, 2009 at 10:42 am

      கைவல்யாதிகளுக்கு ஆத்மானுபவம் மட்டுமே உண்டு….தேவரீர் சாதித்தது சரி

      அடியேன் இராமானுஜ தாசன்

       

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: