RSS

ஜீவாத்மா

03 Mar

ஜீவாத்மா அநுஸ்வரூபன், எம்பெருமானுக்கு சரீரமாக உள்ளவன், சேஷ பூதன், இருபத்து ஐந்தாம் தத்துவமாக இருப்பவன், இவனுக்கு சரீரம் கிடைக்கப் பெறுவது கர்ம வினைகளுக்குச் சேரவே ஆகும். “உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று ஆண்டாள் திருப்பாவையில் திருவாய் மொழிந்து அருளியபடி ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவை அறுக்கவே முடியாது.

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று சுவாமி நம்மாழ்வார் அருளிய படி அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் எம்பெருமானை அடைய தகுதி உண்டு. அதற்க்கு சாதனம் பக்தி ஆகும். சக்தி இருந்தால் பக்தி பண்ணலாம். இல்லையேல் மற்றொரு பெரிய உபாயம் உண்டு, அது தான் பிரபத்தி. இதற்க்கு காலம், குலம் எதுவும் தடை இல்லை. யார் வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் எம்பெருமானை அடைய வேணும் என்ற அவா வேணும்.

தொடரும்…………………..

 
 

2 responses to “ஜீவாத்மா

  1. Chitra Srinivasan

    April 5, 2009 at 11:25 am

    How to do Prapaththi?

     
  2. Ramanuja Dasan

    April 10, 2009 at 2:16 pm

    எம்பெருமானையே பரமப் பிரயோஜனமாகக்கொண்டு, சாத்வீகத் த்யாகத்துடனே, ஆகிஞ்சன்யத்துடனும், அனந்யகதித்வத்துடனும் அவனைச் சரணடைவதே பிரபத்தி ஆகும். இதைச் செய்வதற்கு எல்லோருக்கும் தகுதி உண்டு.

    அடியேன் ராமானுஜ தாசன்

     

Leave a reply to Ramanuja Dasan Cancel reply