RSS

PERIA THIRUMOZHI 1-4(6-10)

21 Feb

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து நான்காம் திருமொழி ஆறாம் பாசுரம் முதல் கடைசிப் பாசுரம் வரை:

ஆறாம் பாசுரம்:

தேரணங்கல்குல் செழுங்கையர் கண்ணி திறத்து
ஒரு மறத்தொழில் புரிந்து*
பாரணங்கிமிலேரேழும் முன்னடர்த்த
பனிமுகில் வண்ணன் எம்பெருமான்*
காரணந்தன்னால் கடும்புனல் கயத்த
கருவறை பிளவெழக்குத்தி*
வாரணங்கொணர்ந்த கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.

விளக்கம்:

தேர் போன்று அழகிய அல்குலையும், கயல் போன்ற கண்களையுடையவளான நப்பின்னைக்காக ஏழு எருதுகளின் வலிமையை அடக்கிய முகில்வண்ணன் உறையுமிடம், மலைகளைப் பிளந்து கொண்டும், அங்கு வாழும் யானைகளையும் அடித்து வரும் கங்கையின் கரை மீது அமைந்த பதரிகாச்ரமம் ஆகும்.

ஏழாம் பாசுரம்:

வெந்திறல் களிறும் வேலை வாயமுதும்
விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரர்க்கருளி எமக்கும் ஈந்தருளும்
எந்தை எம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணை வணங்க
ஆயிர முகத்தினால் அருளி*
மந்தரத் திழிந்த கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.

விளக்கம்:

கடலில் தோன்றிய ஐராவதம் என்னும் யானையையும், அம்ருதம், ச்வர்கம் மற்றும் தேவர்களின் தலைவனாக இந்திரனை ஆக்கியவனும், நாம் வேண்டுவதைத் தருபவனுமான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம், தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி மேருமலையிலிருந்து மந்திர மலைக்கு வந்து, மீண்டும் மந்திர மலையிலிருந்து இமயமலையில் இறங்கி ஆயிர முகத்தோடே பெருகி ஓடி வரும் கங்கையின் கரைமீது அமைந்துள்ள பதரிகாச்ரமம் ஆகும்.

எட்டாம் பாசுரம்:

மாமுனிந்தொருகால் வரிசிலை வளைத்த
மன்னவன் பொன்னிறத் துறவோன்*
ஊன்முனிந்து அவனதுடல் இருபிளவா
உகிர்நுதி மடுத்து* அயனரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம்
தவிர்த்தவன்* தவம் புரிந்து உயர்ந்த
மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.

விளக்கம்:

பஞ்சவடியில் மாயமானாக வந்த மாரீசன் மீது அழகிய வில்லை வளைத்து அம்பை எய்தியவனும், பொன்னிறமுடைய இரணியன் உடலை கூறிய நகங்களைக் கொண்டு கீரியவனும், நான்முகன் சிவனுக்குக் கொடுத்த சாபத்தை நீக்கியவனான எம்பெருமான், தவம் புரிந்து உயர்ந்த மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமீது அமைந்துள்ள பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியுள்ளான் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஒன்பதாம் பாசுரம்:

கொண்டல் மாருதங்கள் குலவரைத் தொகுநீர்க்
குரைகடல் உலகுடன் அனைத்தும்*
உண்டா மாவயிற்றோன் ஒன்சுடரேய்ந்த
உம்பரும் ஊழியும் ஆனான்*
அண்டமூடறுத்து அன்று அந்தரத்திழிந்து
அங்கு அவனியால் அலமர* பெருகும்
மண்டு மாமணிநீர் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.

விளக்கம்:

மேகங்கள், காற்று, கடல்கள் மற்றும் எல்லா உலகங்களையும் ஒரே சமயத்தில் அமுது செய்து திருவயிறு கொண்டவனும், சந்திர சூர்யர்கள், ஆகாசம், காலம் ஆகிய எல்லோரையும் ஆள்பவனான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம், பகீரதன் முயற்சியால் கொண்டு வரப்பட்டதும், ஆகாயத்திலிருந்து பூமியே நடுங்கும்படி நாற்புறமும் ஓடி வந்ததும், தற்போது அமைதியாக சென்று கொண்டிருக்கின்ற கங்கையின் கரைமேல் அமைந்த பதரிகாச்ரமத்தில் ஆகும்.

பத்தாம் பாசுரம்:

வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமதுள்ளானை*
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக்
கலியன் வாய் ஒலி செய்த பணுவல்*
வரம் செய்த இவை ஐந்துமைந்தும் வல்லார்கள்
வானவர் உலகுடன் மருவி*
இருங்கடல் உலகமாண்டு வெண்குடைக்கீழ்
இமயவராகுவர் தாமே.

விளக்கம்:

பேரலைகளையும், தெளிந்த நீரையும் கொண்ட கங்கையின் கரைமீது அமைந்துள்ள பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கும் முந்நீர் வண்ணனாகிய பதரிநாராயணனை இப்பத்து பாசுரங்களைக் கொண்டு அனுபவிப்பவர்கள் வெண்குடையின் கீழ் இருந்து கொண்டு பூமியை ஆண்ட பின், தேவலோகத்தையும் ஆண்டு நித்ய சூரிகளோடே சேர்வர்கள் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

பாசுர உரையில் குறை இருந்தால் திருத்திப்பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்.

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: