RSS

PERIA THIRUMOZHI 1-4(1ST 5 PAASURAMS)

21 Feb

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து நான்காம் திருமொழி விளக்கவுரை: முதல் ஐந்து பாட்டு:

அடுத்த பத்துப் பாடல்களும் பதரிகாச்ரமதுக்கே மங்களாசாசனம் பன்னப்பட்டவை ஆகும். முன்னே பாடிய பாசுரங்களில் வதரி மலையின் பெருமையை வதரி வணங்குதுமே என்று அனுபவித்த ஆழ்வார் இப்பத்துப் பாசுரங்களில் பதரீ நாராயணப் பெருமாளைக் கொண்டாடுகிறார்.

முதல் பாசுரம்:
எனமுனாகி இருநிலமிடந்து அன்று
இணையடி இமையவர் வணங்க*
தானவனாகம் தரணியில் புரளத்
தடஞ்சிலை குனித்த வெந்தலைவன்*
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த
தெய்வநன் நறுமலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத் துள்ளானே.

விளக்கம்:
தண்ணீருக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த பூமியை தன் கோட்டு நுணியால் தாங்கி மேலே எடுத்து வந்தவனும், இராவணனின் உடல் தரையில் புரளும் படி செய்தவனுமான என் தலைவன் வாசம் செய்யும் இடமானது, வானவர்கள் வணங்குவதற்கு உரியதும், கங்கையின் கரையின் மேல் அமைந்ததுமான பதரிகாச்ரமம் ஆகும்.

இரண்டாம் பாசுரம்:
கானிடை யுருவைச் சுடுசரம் துறந்து
கண்டுமுன் கொடுந்தொழி லுரவோன்*
ஊனுடை அகலத்து அடுகணை குளிப்ப
உயிர் கவர்ந்துகந்த வேம்மொருவன்*
தேனுடைக் கமலத் தயனொடு தேவர்
சென்று சென்று இறைஞ்சிட* பெருகு
வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல்
வதரியாச் சிராமத்துள்ளானே.

விளக்கம்:
வனத்தில் மாரீச்சனைக் கண்டு அதன் மீது கூர்மையான பாணத்தை(அம்பை) எய்தியவனும், கொடுந்தொழில் புரிந்த வாலியைக் கொன்றவனுமான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் தேவர்களால் பல காலம் வணங்கப் பட்டதும், ஆகாச கங்கை பெருகி ஓடி வரும் இடத்தில் அமைந்ததுமான பதரிகாச்ரமம் ஆகும்.

மூன்றாம் பாசுரம்:
இலங்கையும் கடலும் அடலருந்துப்பின்
இருநிதிக் கிறைவனும்* அரக்கர்
குலங்களுங்கெட முன் கொடுந்தொழில் புரிந்த
கொற்றவன் கொழுஞ்சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில்*
வெண்துகிற் கொடியென விரிந்து*
வலந்தரு மணிநீர்க் கங்கையின் கரைமேல்
வதரியாச் சிராமத்துள்ளானே.

விளக்கம்:
ஒருவரும் சுலபமாக உள்ளே செல்ல முடியாத இலங்கா புரி மாநகரையும், அதற்குக் காரணமாக அமைந்த தெற்குக் கடற்க்கரையைத் தாண்டியவனும், யாவராலும் வெல்ல முடியாத இராவணனையும், அங்கு உள்ள அரக்கர் குலங்களையும் அழித்தவனான எம்பெருமான், ஆகாச கங்கை மீது அமைந்துள்ள பதரிகாச்ரமத்தில் எழுந்தருளி உள்ளான் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

நான்காம் பாசுரம்:
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே
தொழுது எழு தொண்டர்கள் தமக்கு*
பிணி ஒழித்தமரர் பெருவிசும்பருளும்
பேரருளாளன் எம்பெருமான்*
அணிமலார்க் குழலார் அரம்பையர் துகிலும்*
ஆரமும் வாரி வந்து* அணிநீர்
மணிகொழித் திழிந்த கங்கையின் கரைமேல்
வதரியாச் சிராமத்துள்ளானே.

விளக்கம்:
மனமே ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிந்து கொள். அடியார்களான நமது பிணியைப்(விரோதியை)போக்கிப் பரமபதம் அருளுபவனான பேரருளாளன் எழுந்தருளி உள்ள இடமானதும், அழகிய நீரை உடைய கங்கை நதிக் கரையில் அமைந்ததுமான பதரிகாச்ரமம் சென்று வணங்கி உய்வு பெறுவோமாக என்று மங்களாசாசனம் செய்கிறார்.

ஐந்தாம் பாசுரம்:
பேயிடைக் கிருந்து வந்த மற்றவள்தன்
பெருமுலை சுவைத்திட* பெற்ற
தயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட
வளர்ந்த என் தலைவன்*
சேய்முகட்டுச்சி அண்டமும் சுமந்த
செம்பொன் செய் விளங்கலிலங்கு*
வாய்முகட்டிழிந்த கங்கையின் கரைமேல்
வதரியாச் சிராமத்துள்ளானே.
விளக்கம்:
யசோதையைப் போன்று வந்தவளான பூதனையின் முலைப்பாலை சுவைத்ததைக் கண்ட யசோதை நான் இவள் மடியில் இருக்கும் குழந்தையை எப்படி எடுத்துக்கொள்வேன் என்று அஞ்சும் படி இருந்த எம்பெருமான் இருக்கும் இடம்; சிகரத்தின் உச்சியிலே அண்டத்தை தாங்குவதும், உச்சியிலிருந்து வரும் ஆகாச கங்கையின் கரையில் அமைந்ததுமான பதரிகாச்ரமம் ஆகும்.

விளக்கத்தில் குறை இருக்குமாயின் திருதிப்பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
மேலும் உள்ள பாசுரங்களின் விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
அடியேன் ராமானுஜ தாசன்.

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: