RSS

PERIA THIRUMOZHI 1-3(10)

21 Feb

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:

பெரிய திருமொழி முதல் பத்து மூன்றாம் திருமொழி
ஆழ்வார் அடுத்ததாக அனுபவிக்கும் திவ்யதேசம் பதரிகாச்ரமம் ஆகும். இத்திவ்யதேசமும் வடநாட்டில் உள்ளது. பதரீ என்னும் சொல் இலந்தை மரத்தைக் குறிக்கும். இலந்தை மரம் நிறைய அடர்ந்து காணப்படுவதால் இந்தப் பெயர் (பதரீ) ஏற்பட்டதாம். இத்திவ்யதேசத்திற்குச செல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும்மாம், அதனால் ஆழ்வார் உடல் நிலை சீராக இருக்கும் போதே சென்று சேவிக்க வேணும் என்கிறார்.

வயது முதிர்ந்த காலத்தில் கூன் விழுந்து, உடல் தளர்ந்து, கால் முறிந்து தடுமாறுவதர்க்குள் பூதனையின் பாலை உயிரோடு குடித்தவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமான வதரியை வணங்குவோம் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

வயதான காலத்தில் கூன் விழுந்த காரணத்தால் ஒரு கை முதுகைப் பிடித்துக்கொண்டும், மற்றொரு கை கொம்பை பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து இளம் பெண்கள் பரிகாசம் செய்வதற்கு முன், வண்டுகள் இசைப்பாடும் இடமாகிய வதரியை வணங்குவோம் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

வயதான காலத்தில் நரம்புகள் உரிகள் போல வெளிக்கிளம்பியும், மனம் நலிந்தும், கண்கள் சுழலமிட்டும் இருப்பதால் செல்ல வேண்டிய வழி தெரியாமல் நின்று தடுமாறுவதர்க்குள் பக்தியுடன் பகவான் எழுந்தருளியிருக்கும் இடமான வதரியை வணங்குவோமே என்கிறார் ஆழ்வார்.

வயதான காரணத்தால் கண்கள் இடுங்கி பீளை பெருகுவதோடு, பித்தமும் மேலிடுவதால் இருமல் ஏற்பட்டும், கால்கள் ஒன்றோடொன்று சேர்ந்தும் தடுமாறுவதர்க்குள் இளம் வயதில் கன்றுகளை மேய்த்தவனும், அக்கன்றுகளுக்கு வரும் தீங்கைத் தீர்பதற்காக கோவர்த்தன மலையை தனது விரலால் தூக்கி குடையாக பிடித்தவனுமாகிய எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமான வதரியை வணங்குவோம் என்று சொல்லும் படி அமைந்த பாசுரமாகும்.

இளமைக் காலத்தில் மாதர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அழகு பெற்றும் அவர்களுடைய வாயமுதம் பருகிச் சிற்றின்பங்களில் காலத்தை வீணே கழித்து அழிந்தேனே என்று சொல்லி நடக்க முடியாமல் இருக்கும் காலத்தில் தடுமாறுவதற்கு முன் திருத்துழாய் மாலை அணிந்தவனான எம்பெருமான் வாழும் இடமான வதரியை வணங்குவோம் என்கிறார்.

உடல் தளர்ந்து போய், கோழைத்தனம் ஏற்பட்டு, குரல் தொண்டையை அடைத்து, பைத்தியம் பிடித்தவன் போல் பேசுவதற்கு முன், ஆதிமூர்த்தியானவனும் ஆழ்கடலைக் கடைந்தவனுமாகிய எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமான வதரியை வணங்குவோம் என்று சொல்லும் படி அமைந்த பாசுரமாகும்.

வயது கூடுவதால் ஏற்படும் கோழைத்தனத்தால் பிறருடைய பரிகாசப் பேச்சுக்கு ஆளாவதற்கு முன், நம்மை எக்காலத்திலும் வாழ வைப்பவனான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமான வதரியை வணங்குவோம் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

வயதான காலத்தில் இருமி இருமி உடல் இளைத்ததால் உள்ளம் கூசும் படி மரியாதை குறைவாகப் பேசும் மாதர்களிடம் கொண்டிருக்கும் அன்பை விட்டு நறுமணம் வீசும் திருத்துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானை வணங்குவோமாக என்று சொல்லும் படி அமைந்த பாசுரமாகும்.

ஐம்புலன்கள் வலிமை இழந்து போயும், மனம் கலங்கி பிதற்றுவதற்கு முன்பும், அடியார்களான தொண்டர்கள் பகவானை ஆயிர நாமம் கொண்டு ஆடிப்பாடும் இடமான வதரியை வணங்குவோமாக என்கிறார்.

தேனைப பருகி வாழும் வண்டுகள் வாசம் செய்யும் இடமான பதரியில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை, ஆழ்வார் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களைக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தால், பரமபதத்தையே அடைவார்களாம் என்பது ஆழ்வார் திருவாக்கு ஆகும்.

உரைகளில் குறை இருக்குமானால் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்.

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: