RSS

PERIA THIRUMOZHI 1-2(10)

21 Feb

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து இரண்டாம் பதிகம்

திருமந்திரத்தின் பெருமையை நமக்கு உணர்த்திய ஆழ்வார், அத்திருமந்திரத்தின் அதிகாரியான ஸ்ரீமந்நாராயணன், பின்னானார் வணங்கும் சோதியாக, தேங்கிய மடுக்கள் என்று சொல்லும்படியாக எழுந்தருளியிருந்து சேவை சாதிக்கும் திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணத் தொடங்குகிறார். ஆழ்வார் பாடிய முதல் திவ்யதேசம் திருப்ப்ரிதி என்னும் வட நாட்டு திருப்பதி ஆகும். இந்த திவ்யதேசமானது இமயமலைச் சாரலில் உள்ளது.

ஆழ்வார் திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணும் போது, அவ்வூரின் பெருமை மற்றும் வளம் ஆகியவற்றையும் சேர்த்தே அனுபவிக்கிறார். முதல் பாசுரம் வாலி என்ற அரசனை வென்ற ஸ்ரீராமன் எழுந்தருளியிருக்கும் இடமான திருப்ப்ரிதி என்னும் திவ்யதேசத்தை நெஞ்சே நீ சென்றடைவாயாக என்று சொல்லும்படியாக அமைந்த பாசுரமாகும்.

முதலில் அவ்வெம்பெருமானை இராமனாக அனுபவித்த ஆழ்வார், நான்காம் பாட்டில் இரணியனின் மார்பை பிளந்தவனும், தேவர்களால் வணங்கப்படுபவனான ஸ்ரீ ந்ருசிம்மப் பெருமாள் எழுந்தருளி உள்ள திருப்ப்ரிதி என்னும் திவ்யதேசத்தை மனமே நீ சென்றடைவாயாக என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

மேலும் தேவர்களுக்கு அபயம் அளிக்கும் இடமான திருப்பாற்கடலில் நித்ய வாசம் செய்யும் எம்பெருமான் எழுந்தருளி உள்ள இடம் என்றும், இமயமலையில் குருக்கத்தி கொடிகள் அடர்ந்து காணப்படுவதாலும், அக்கொடிகள் மேகத்தை வளைத்தார்பபோல் படர்ந்து இருப்பதால் வண்டுகள் நுழைந்து பண் பாடும் இடம் திருப்ப்ரிதி என்றும், தேவர்கள் நான்முகனை முன்னிட்டுக்கொண்டு பரமனே, ஆதிமூலமே, முகில்வண்ணா என்று வாயாரப்பாடி பகவானை திருவடி தொழும் இடம் என்றும், அவனுடைய திருநாமங்களை பாடுபவர்களுக்கு அபயம் அளிக்கும் பரமபுருஷன் எழுந்தருளி இருக்கும் இடம் என்றும் அருளிச்செய்கிறார். இப்பத்து பாசுரங்களை அனுசந்திக்கும் அதிகாரிகளை அருவினைகள் அடையாதாம்.

உறைகளில் குறை இருக்குமானால் திருத்திப்பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்

 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: