RSS

PERIA THIRUMOZHI 1 – 10 PAASURAM

21 Feb

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து முதல் திருமொழி எளிய முறை விளக்கம்:

சிற்றின்பங்களிலே பல காலம் வீணாகக்கழித்த ஆழ்வார், எம்பெருமானின் நிர்ஹேதுக கிருபையாலே திருத்திப்பணிகொள்ளப்பட்டார். அஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை பகவானிடமே உபதேசமாகப் பெற்றவரானார். அவ்வனுபவம் பெற்ற பின்பு, ஆழ்வார் எம்பெருமானையே எல்லாமாக அனுபவிக்கலானார். சுவாமி திருமங்கைஆழ்வார் பாடின பிரபந்தங்கள் மாறன் பணித்த நான்மறைக்கு அங்கமாக அமைந்தது. ஆறு அங்கங்களில் ஒன்றான பெரிய திருமொழி முதல் பத்து ஒன்றாம் திருமொழியில் ஆழ்வார், எம்பெருமானின் பெருமையைப் பேசும் திருமந்திரத்தின் பெருமையோடே எம்பெருமானையும் அனுபவிக்கிறார்.

ஆழ்வார் பாடின பாசுரங்களின் கருத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிப்போம்.

எல்லோருக்கும் உரியவன் பகவானே, மற்றவை அவனுடைய உடமைகளே என்பதை தெளிவாக புரிந்து கொண்ட ஆழ்வார், இது தெரியாமல் இத்தனை காலம் பொழுதை வீணே கழித்தமையை எண்ணி வருத்தப்பட்டு, அவனுடைய இன்னருளால் நற்கதி அடைய வழி கிடைத்தது என்கிறார். இவ்வனுபவத்தை நினைக்கும் போது குரல் தழுதழுக்கிறது என்றும், ஆனந்தக்கண்ணீர் தம் உடம்பை நனைக்கிறது என்றும் கூறுகிறார்.

மேலே தஞ்சைமாமணிக்கோவில் என்னும் திவ்ய க்ஷேத்ரத்தில் எழுந்தருளி உள்ள எம்பெருமானை வணங்கி அவனுடைய பெருமையையும், திருக்குடந்தை எம்பெருமானின் பெருமையையும் பேசி அத்திவ்யதேசத்திற்கு சென்று எல்லோரும் எம்பெருமானை அடிபணிய பிரார்த்திக்கிறார். நல்ல பொருளான ஆராமுதனைக் காட்டக் கூடிய சொல்லான நாராயண நாமத்தைப் பாடி உஜ்ஜீவியுங்கள் என்று பிரார்த்திக்கிறார்.

பகவானுடைய திருநாமத்தை கூறுவதால் ஏற்படும் நன்மைகளையும் மங்களாசாசனம் பண்ணுகிறார். அதாவது எம்பெருமான் திருநாமம் நமக்கு
தொண்டர் குலம் தரும், துயர் இல்லாமல் இருக்க வழி வகுக்கும், பகவானுடைய கிருபையினால் நித்ய கைங்கர்யம் செய்வதற்கு வீடுபேறு பெற்றுத்தரும், பெற்ற தாயார் செய்யும் நன்மைகளைவிட மேலான நன்மைகளைத் தரும் மற்றும் விழம் போல் இருக்கும் பாபங்கள் அழிந்து விடும் என்றும் மங்களாசாசனம் பண்ணுகிறார்.

உரையில் குறை இருந்தால் திருத்திப்பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
அடியேன் ராமானுஜ தாசன்.

 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: