RSS

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து ஐந்தாம் திருமொழி பாசுர விளக்கம் – (முதல் நான்கு பாசுரங்களுக்கு மட்டும்)

21 Feb

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

முதல் பாசுரம்:
கலை என்றால் மான், கரி என்றால் யானை. பரி என்றால் குதிரை. இப்படி மான்கள், குதிரைகள், மற்றும் யானைகள் வாழும் காட்டைக் கடந்து, வில் அம்பு ஆகியவற்றைத் துணையாகக்கொண்டு போர்களத்திரற்க்குச் சென்றவனும், மலையைக் கொண்டு கடலில் அணை கட்டியவனும், கடலைப் பாதுகாப்பாகக் கொண்டு எப்போதும் கையில் வாளை ஏந்திக் கொண்டிருப்பவனும், அரக்கர் தலைவனுமான இராவணனின் பத்துத்தலையை அருத்தொழித்தவனான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமான சாளக்ராமத்தை மனமே நீ சென்றடைவாயாக என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

இரண்டாம் பாசுரம்:
மதம் கொண்ட யானை, குதிரை மற்றும் தேர்கள் ஆகியவைகளைக் கொண்டு இலங்கையை அழிக்கும்படி செய்த இராமபிரான், தேவர்கள் விரும்பி வந்து தொழுவதற்கு ஏற்ப மலர்களாலும், பரிமளம் மிக்க குளங்களாலும் சூழப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கும் சாளக்ராமத்தை மனமே நீ சென்றடைவாயாக என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

மூன்றாம் பாசுரம்:
கடல் அலைகள், மலைகள், காலம், எட்டுத் திசைகள், சந்திரன், சூரியன் மற்றும் இருட்டு ஆகியவற்றிற்கு அந்தர்யாமியாக இருப்பவனும், திருக்கையில் சக்கரத்தாழ்வானை ஏந்தியவனும், தேவாதி தேவனும், தன்னைச் சரணடையாத அசுரர்களுக்குப் பகைவனும் ஆகிய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமானது ஜலத்தால் சூழப்பட்டு அழகுடன் காட்சி அளிக்கும் சாளக்ராம திவ்யதேசத்தை மனமே நீ சென்றடைவாயாக என்று சொல்லும்படி அமைந்த பாசுரமாகும்.

நான்காம் பாசுரம்:
திருவூரகத்தில் எழுந்தருளி இருப்பவனும், திருக்குடந்தையில் எழுந்தருளி இருக்கும் உத்தமனும், அரக்கர் குலங்களை அழித்தவனும், வற்றாத காவிரி சூழ்ந்த திருப்பேர் நகரில் எழுந்தருளி இருப்பவனும், வண்டுகள் ஆரவாரம் செய்யும் திருத்துழாய் மாலையை அணிந்தவனுமாகிய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம், தாரா என்னும் பக்ஷிகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த சாளக்ராமம் ஆகும்.

உரைகளில் குறை இருந்தால் திருத்திப்பணிகொள்ள பிரார்த்திக்கிறேன். அடியேன் ராமானுஜ தாசன்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பாசுரம்:

கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்*
சிலையும் கணையும் துணையாகச்
சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலைநீர் அணைகட்டி
மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்துகந்தான்
சாளக்ராமம் அடை நெஞ்சே*

கடம் சூழ் கரியும் பரிமாவும்
ஒலி மாந்தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை
பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இருவிசும்பில்
இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய
சாளக்ராமம் அடை நெஞ்சே*

உலவு திரையும் குலவரையும்
ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளுமாய்
நின்றான் வென்றி விறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான்
மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம் சூழ்ந்து அழகாய
சாளக்ராமம் அடை நெஞ்சே*

ஊரான் குடந்தை உத்தமன்
ஒருகால் இருகால் சிலை வளைய*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்
வற்றா வருபுனல் சூழ் பேரான்*
பேராயிரம் உடையான்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த
சாளக்ராமம் அடை நெஞ்சே*

அடியேன் ராமானுஜ தாசன்

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: