RSS

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து ஆறாம் திருமொழிப் பாசுரங்கள்(முதல் ஐந்து மட்டும்)

21 Feb

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம::
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

இந்தப் பகுதியில் நாம் அனுபவிக்க இருக்கும் திவ்யதேசம் நைமிசாரண்யம் ஆகும். இந்த திவ்யதேசமானது வடநாட்டில் உள்ளது மேலும் ச்வயம்வ்ய்க்த க்ஷேத்ரங்களில் ஒன்று ஆகும்.இப்ப்ரபந்தமானது ஆழ்வார் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமானை சரணடைவது போன்று அமைந்தது ஆகும்.

ஒன்றாம் பாசுரம்:

வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள்
மாதரார் வனமுலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழையெனக் கருதிப்
பேதையேன் பிறவி நோயருப்பான்*
ஏனிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
இளையவர் கலவியின் திறத்தை*
நாணினேன் வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரனியத்துள் எந்தாய்!

விளக்கம்:
எம்பெருமானே அடியேன் இது நாள் வரை சிறிய நெற்றியும், பெரிய தோள்களையும் உடைய பெண்களின் ஸ்தனத்தையே பரம புருஷார்த்தமாக எண்ணி இருந்தேன். பிறவிப் பெருநோயை நீக்கிக் கொள்ளும் எண்ணமே இல்லாதவனாக இருந்து விட்டேன். இப்போது புரிந்து அவர்களுடைய கலவியை வெறுத்ததோடு இதுநாள் வரை இருந்த நிலைமையை எண்ணி, உன் திருவடிகளைப் பணிகிறேன் என்கிறார்
ஆழ்வார்.

இரண்டாம் பாசுரம்:

சிலம்படி உருவிற் கருநெடுங் கண்ணார்
திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப்
போக்கினேன் பொழுதினை வாளா*
அலம்புரி தடக்கை ஆயனே மாயா!
வானவர்க்கரசனே!* வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்
நைமிசாரனியத்துள் எந்தாய்!

விளக்கம்:

சிலம்புகளைக் கால்களில் அணிந்தவர்களும், கருத்த நீண்ட கண்களை உடைய மாதர்களிடமே மனத்தைச் செலுத்தியதால், தருமத்தை மறந்து அந்த போகத்திலயே காலத்தை வீணாகக் கழித்தேன். பெரும் பயன்களை அளிப்பவனும், ஆச்சர்யமான பல அற்புதமான செயல்களைச் செய்பவனான ஆயனே! தேவதிதேவனே என்று கொண்டாடப் படுபவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனுமான உன் திருவடிகளை வந்து அடைந்தேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

மூன்றாம் பாசுரம்:

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து
சுரிகுழல் மடந்தையர் திறத்து*
காதலே மிகுத்துத் கண்டவா திரிந்த
தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன்
வேலை வெண்திரை ஆலமரக் கடைந்த*
நாதனே வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரனியத்துள் எந்தாய்*

விளக்கம்:

தேவர்களுக்காக கடலைக் கடைந்தவனே, நைமிசாரனியத்து எம்பெருமானே, சூதாடியும், கலவுகளைச் செய்தும், மாதர்கள் மீது இருந்த ஆசையின் மிகுதியால் கண்டபடி திரிந்தவனான அடியேன், யம தூதர்களால் ஏற்படக்கூடிய வேதனைகளை நினைத்துப் பார்த்து நடுங்கி இன்று உன் திருவடிகளை அடைந்தேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

நான்காம் பாசுரம்:

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர் பொருள் தாரமென்று இவற்றை*
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி
ஏற்றி வைத்து* ஏறி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப்
பாவீ தழுவென மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரனியத்துள் எந்தாய்*

விளக்கம்:

நறுமணம் வீசும் கூந்தலை உடைய மனைவியை விட்டு பிறருடைய மனைவி மீது ஆசை கொண்டுத் திரிந்தவர்கள் இறந்து போனால், யமதூதர்கள் அவர்களைப் பிடித்து இழுத்துச் சென்று துன்புறுத்தி பெரும் பாவம் செய்தவனே! நெருப்புப் பற்றி எரியும் செம்பினால் செய்யப்பட இப்பாவையைப் பிடித்துக்கொள் என்று சொல்வார்களே, அதற்க்கு அஞ்சி நம்பனே(குற்றங்களைக் காணாது அருள் புரிபவனே), நைமிசாரனியத்து எம்பெருமானே இன்று உன் திருவடிகளை அடைந்தேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஐந்தாம் பாசுரம்:

இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்றேன்று
இறந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ்ச்சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!
நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை*
கடுஞ்ச்சொலார் கடியார் காலனார் தமரால்
படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரனியத்துள் எந்தாய்*

விளக்கம்:

பிச்சைக் கேட்டு வந்த ஏழையிடம் கடுமையான சொற்களைச் சொன்னதோடு உணவு இல்லை என்று கூறிய நீச்சனான அடியேன், தீவினைகளின் பலன்களை சிறிதும் யோசிக்காமல் இருந்து விட்டேன். இப்போது யம தூதர்களின் கொடுமைக்குப் பயந்து நடுங்கி நைமிசாரனியத்து எம்பெருமானே உன் திருவடிகளை அடைந்தேன் என்கிறார்.

அடியேன் ராமானுஜ தாசன்

உரைகளில் குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

மற்ற பாசுரங்களை அடுத்தப் பகுதியில் பார்போம்.

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: